ஹாய் டியர்ஸ்..
#அந்தி_வரும்_வேளை
#title_reserved
#Five_Brothers_story
டீசர் 1
சித்ரா டென்ஷாக அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, “சித்ரா பொண்ணு ரெடியா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தார் கேசவன்.
கணவரைப் பிடித்து இழுத்து கதவை அடைத்தவர், “என்னங்க கங்காவை காணோம்ங்க” என்று பதற்றமாக சொல்ல,
“என்னது பொண்ணைக் காணோமா?” என்று அதிர்ச்சியில் உறைந்தார்.
இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். அவர்கள் அங்கேயே தேங்கி கிடந்தால் நேரமும் அப்படியே தேங்கி நிற்குமா என்ன??
வெகு நேரமாக கல்யாணப் பெண்ணைக் காணவில்லையே என்று சந்தேகம் கொண்ட மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணின் அறைக் கதவைத் தட்டினார்கள்.
“என்னங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் கதவைத் தட்டுறாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க”
“இப்போ என்ன சொல்லி சமாளிக்குறது?”
“சமாளிக்குறது எல்லாம் அந்தக் குடும்பத்துக்கிட்ட எடுபடுமா? கல்யாணம்ன்னு சொல்லி ஊரையே கூட்டிட்டு வந்து இருக்காங்க. இப்போ பொண்ணைக் காணோம்ன்னா, நம்ம குடும்பத்தையே ம*ண்ணெய் ஊத்தி கொ*ளுத்திடுவாங்க” என சித்ரா நடுநடுங்கிக் கொண்டிருந்த போதே, அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வந்து விட்டார்கள்.
சித்ராவும் கேசவனும் வாசலைப் பார்க்க, அங்கே தனது நான்கு தம்பிகளை விலக்கிக் கொண்டு இறுகிய முகத்துடன் நடுநாயகமாக வந்து நின்றான் அனலரசன்.. வெண்ணிற பட்டுவேட்டி, பட்டுச்சட்டையில் இருந்தவனின் கூர்மையானப் பார்வை அவர்களைத் துளைத்து எடுக்க, கேசவனும் நடுங்கி போய் அவனைப் பார்த்தார்.
அறையைச் சுற்றி ஒரு பார்வைப் பார்த்த அனலரசன் அழுத்தமான அடியெடுத்து வைத்து அவர்களிடம் சென்று நின்றான்.
“கல்யாணப் பொண்ணு எங்கே?” அவன் இறுகிய குரலில் கேட்க,
“அவ.. அவ.. ஓடி போயிட்டா” என்றார் சித்ரா.
“என்னது.. ஓடி போயிட்டாளா?” என்று அனலரசனின் அம்மா பதற்றத்துடன் கேட்க,
“நாங்க தான் பொண்ணு பார்க்க வந்தப்போவே கேட்டோம் இல்ல.. பொண்ணுக்கு காதல் கீதல் எதுவும் இருக்கான்னு.. அப்போவே சொல்லி தொலைச்சி இருக்க வேண்டியது தானே..” என்று அவனின் சித்தி ஆத்திரத்துடன் கேட்டார். அவரைத் தொடர்ந்து தம்பிகளும் அத்தைமார்களும் வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு போக, அனலரசனின் முகமோ அவமானத்தில் சிவந்துப் போனது.
அவன் இரண்டடி தள்ளிச் சென்று நின்று இருக்க, “அடடடா.. மெதுவடை மெதுவடை தான்..” என்று கையின் சுட்டு விரலில் மெதுவடையை மாட்டி கொண்டு துள்ளிக் குதித்தபடி அந்த அறைக்குள் வந்தாள் நதியா. கல்யாணப் பெண்ணின் தங்கை.
அறையில் கூடி இருந்தவர்களையும் தாய், தந்தை அழுது கொண்டிருப்பதையும் பார்த்தவள், “என்னாச்சு?” என்று கேட்க,
“ம்.. உங்க அக்கா ஓடிப் போயிட்டாளாம்..” என்றார் சித்தி.
“என்னது ஓடி போயிட்டாளா..?” என்று அதிர்ந்து விழி விரித்த நதியா, வேகமாக ஓடிச் சென்று அலமாரியைத் திறந்து பார்த்தாள்.
“அங்க என்னடி பார்க்குற?” என்று சித்ரா கேட்க,
“ம்.. அவ மட்டும் போனாளா? இல்ல, போற போக்குல என்னோட மாங்கா டிசைன் போட்ட செயினையும் தூக்கிட்டு போயிட்டாளான்னு பார்க்கிறேன்..” என்றவள் அதைத் தேடி எடுத்து முத்தமிட்டு அகம் மகிழ, மற்றவர்களோ வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டார்கள்.
அனலரசனின் பார்வை மட்டும் ஒரு வித கூர்மையுடன் நதியாவின் மேல் பதிய, அதைப் பார்த்து விட்டு அக்காவின் காதை கடித்தார் அவனது சித்தி.
அப்போது நதியா கங்காவுக்காக வாங்கிய புது புடவைகளைப் பார்த்தவள், “அம்மா.. இங்க பார்த்தியா?? அக்கா புதுப்புடவை எல்லாம் அப்படியே விட்டுட்டு தான் போயிருக்கா.. அப்போ இதெல்லாம் எனக்குத் தானே” என்று கேட்டு விட்டு அதனை தன் மேல் வைத்து கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.
“உங்க மூத்த பொண்ணுக்கு பதிலா இவளுக்கு அலங்காரம் பண்ணுங்க..” என்று அனலரசன் கூற, சித்ரா திகைத்துப் போனார்.
“அது.. அவ.. அவளை எப்படி உங்களுக்கு?” என்று அவர் திக்கி திணற, நதியாவின் காதில் இது எதுவும் விழவில்லை.
“எப்படின்னா.. ஊருக்காரங்க முன்னாடி எங்களை அவமானப்பட்டு போக சொல்றீங்களா? போங்க உங்க சின்னப் பொண்ணுக்கிட்ட போய் பேசுங்க” என்று அவனது சித்தி அதிகாரமாகச் சொல்ல, சித்ரா ஒரு பெருமூச்சுடன் மகளை நெருங்கினார்.
“நதிம்மா.. இந்தப் புடவை உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று அவர் கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டே கேட்க, அவள் விழி விரித்து “ம்..” என்றாள்.
“வா.. நான் உனக்கு கட்டி விடுறேன்” என்றவர் மகளை அழைத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றார்.
சிறிது நேரத்தில் புடவைக் கட்டிக் கொண்டு நகை அணிந்து கொண்டு வந்து நின்றவளை அனைவரும் ஏற, இறங்க பார்த்தார்கள். “மண மேடைக்கு அழைச்சிட்டு வாங்க..” என்ற அனலரசன் அறையில் இருந்து வெளியேறி விட, அவள் திகைப்பில் ஆழ்ந்தாள்.
“அத்தான் என்னம்மா சொல்லிட்டு போறாரு..” என்று அவள் மலங்க மலங்க விழித்துக் கொண்டே கேட்க,
“இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கும் மாப்பிள்ளைக்கும் கல்யாணம்” என்று பேரிடியை இறங்கினார்.
நதியாவுக்கு மறுத்துக் கூற கூட அவர்கள் அவகாசம் தரவில்லை. அவளை அழைத்துச் சென்று மணமேடையில் அனலரசனின் அருகில் அமர வைத்து விட்டார்கள்.
அவள் கழுத்தில் தாலி கட்டிய அடுத்த நொடி மணமேடையில் இருந்து எழுந்துக் கொண்ட அனலரசன் கீழே இறங்கி வர, அவனது தம்பியான கார்முகிலன் ஒரு பெரிய நாற்காலியைத் தூக்கி வந்து மண்டபத்தின் நடுவே போட்டான். மற்றொரு தம்பி வசந்தனோ நடந்து வந்து கொண்டே தன்னை நோக்கி கையை நீட்டிய அண்ணனின் கையில் ஒரு பெரிய வீச்சருவாளைக் கொடுத்தான்.
கையில் வீச்சருவாளைப் பிடித்தபடி நாற்காலியில் வந்து அமர்ந்து கால் மீது கால் போட்ட அனலரசன், “கல்யாணப் பொண்ணு இந்த மண்டபத்துல இருந்து ஓடிப் போக, இங்கிருக்குற யாரோ தான் காரணமா இருக்கணும். அது யாருன்னு அவங்களே என் முன்னாடி வந்து நின்னுட்டா, போனா போகுதுன்னு உ*யிரை மட்டுமாவது விட்டு வைப்பேன். நானா கண்டுபிடிச்சா, இதே இடத்துல கண்டந் துண்டமா வெ*ட்டி கூ*று போட்டுடுவேன்.. உங்க எல்லாருக்கும் 2 நிமிஷம் தான் டைம்” என்று அழுத்தமாகக் கூற, அந்த நபருக்கு பயத்தில் முகமெல்லாம் குப்பென்று வியர்த்துப் போனது.
(அது யாருன்னு கண்டுபிடிக்குறவங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பார்சல்

)