“தீராக் காதல் தீ நீயே”
நாயகன் – ருத்ர பிரதாபன்
நாயகி – அபிஸ்ரீ
ஏழு மாடி கட்டடத்தின் மேலே ஒருவன் நின்று இருக்க, கீழே கூடி இருந்த கூட்டம் ‘குதிக்காதே’ என்று கத்திக் கெஞ்சிக் கொண்டிருந்தது.
அப்போது போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. இன்ஸ்பெக்டர் உடையில் இறங்கிய அபி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து மேலே நின்று இருப்பவனைப் பார்த்தாள்.
“மேடம்.. இந்தாங்க” என்ற கான்ஸ்டெபில் அவளிடம் ஒரு ஒலிவாங்கியை நீட்டினார்.
அதை வாங்கியவள், “ஹலோ.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். முதல்ல கீழே இறங்கி வாங்க..” என்றாள்.
“முடியாது மேடம். நான் இங்கிருந்து குதிக்கத் தான் போறேன்” என்றான் அவன்.
“ஹே மேன்.. தற்கொலை பண்ணிக்கிறது சட்டப்படி குற்றம்”
“பரவாயில்ல மேடம்.. எப்படியும் நான் இங்க இருந்து குதிச்சா எலும்பு கூட தேறாது. நேரா சொர்க்கம் தான். அப்புறம் நீங்க எப்படி என் மேல கேஸ் போட முடியும்?” என்று இடக்காகக் கேட்டவனைச் சலிப்புடன் பார்த்தவள்
“இப்படி சாகுற அளவுக்கு உனக்கு என்னய்யா பிரச்சனை?” என்று கேட்டாள்.
“சொன்னா தீர்த்து வச்சிடுவீங்களா?”
“கண்டிப்பா தீர்த்து வைக்கிறேன். உன் பிரச்சனை என்னன்னு சொல்லு”
“என் பொண்டாட்டி என் கூட ஒரு வாரமா பேசல மேடம்?”
“ஆ..” என்று ஒட்டு மொத்த கூட்டமும் வாயைப் பிளக்க, அபிக்கும் அதே நிலை தான்.
“வாட்.. பொண்டாட்டி பேசலன்னு யாராவது இப்படி பில்டிங் மேல இருந்து குதிப்பாங்களா?”
“அதானே.. யோவ்.. அதெல்லாம் எவ்ளோ பெரிய வரம் தெரியுமா? என் பொண்டாட்டி எல்லாம் கொஞ்சம் நேரம் வாயை மூட மாட்டாளான்னு இருக்கும் எனக்கு. எப்போ பார்த்தாலும் நொயி நொயின்னு பேசியே சாவடிக்கிறாய்யா” என்று கூட்டத்தில் ஒருவன் புலம்ப,
அவனைத் திரும்பி பார்த்து முறைத்த அபி, “அது ரொம்ப முக்கியமா இப்போ” என்று பல்லைக் கடித்தாள்.
“மேடம்.. யாருக்கு எப்படியோ.. எனக்கு என் பொண்டாட்டின்னா உயிர் மேடம். எப்படியாவது அவளை என்கூட பேச சொல்லுங்க மேடம்” என்று அவன் கெஞ்ச,
“சரி.. பேச சொல்றேன். கீழே இறங்கி வா” என்றாள்.
“நிஜமாவா மேடம்?”
“நிஜமா தான்ய்யா.. முதல்ல நீ கீழே இறங்கு”
“அப்புறம் மாத்தி பேசக்கூடாது மேடம்”
“மாட்டேன்.. வா” என்று அவள் உறுதி அளிக்க, அவன் கீழே இறங்கி வந்தான்.
“உன் பொண்டாட்டி எங்கே இருக்கா?” என்று அவள் அவனிடம் வினவ,
“வாங்க மேடம். சொல்றேன்..” என்றவன் ஜிப்பின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். கூட்டத்தை கலைத்து விட்டு வந்து ஜிப்பின் முன் சீட்டில் ஏறி அமர்ந்த அபி, “டிரைவர்க்கிட்ட அட்ரஸ் சொல்லு” என்றாள்.
அவனும் ரகசியமாக அவரது காதில் வீட்டு விலாசத்தை சொல்ல, அவர் அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தார்.
“போ” என்பது போல அவன் பார்வை காட்ட, அவர் அப்படியே திரும்பி வண்டியை எடுத்தார்.
போகும் வழியில் “ஆமா உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?” என்று அவள் சாதாரணமாகக் கேட்க, அவன் “ஒரு வாரம் ஆச்சு மேடம்” என்றான் அடக்கப்பட்ட புன்னகை உடன்.
“என்னது.. ஒரு வாரமா..” என்று அதிர்ந்தவளின் அலைப்பேசி அலற, எடுத்து பார்த்தவள் உடனே அழைப்பை ஏற்று பேசினாள். உயர் அதிகாரியின் அழைப்பு அது.
அவள் பேசி கொண்டே வர, வண்டியும் ஓரிடத்தில் சென்று நின்றது. “ஓகே ஸார்.. நான் என்னன்னு பார்த்துட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவள், வண்டியில் இருந்து இறங்கி வீட்டை பார்க்க, அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
ஏனென்றால், அது அவள் வீடு தான்.
அவளது அதிர்ந்த தோற்றத்தை பார்த்துக் கொண்டே அவளின் முன்னே வந்தவன், “இது தான் மேடம், என் பொண்டாட்டியோட வீடு” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“நீ.. நீங்க..?” என்று அவள் திக்கித் திணற,
“ருத்ர பிரதாபன்” என்றவன் சிறிது இடைவெளி விட்டு “உங்க புருஷன் மேடம்” என்றான் விரிந்தப் புன்னகையுடன்..
நாயகன் – ருத்ர பிரதாபன்
நாயகி – அபிஸ்ரீ
டீசர் 1 :-